காமத்துப்பால் (Inbam)Chapter 118: பசப்புறு பருவரல்

    திருக்குறள் 1182

    Thirukkural Verse 1182 — Pallor

    Thiruvalluvar

    அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென் மேனிமேல் ஊரும் பசப்பு.


    English Meaning

    Sallowness, as if proud of having been caused by him, would now ride on my person.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    அந்தக் காதலர் உண்டாக்கினார் என்னும் பெருமிதத்தோடு இந்தப் பசலை நிறம் என்னுடைய மேனிமேல் ஏறி ஊர்ந்து பரவி வருகிறது.

    சாலமன் பாப்பையா

    இந்தப் பசலை அவர் எனக்குத் தந்தது என்னும் பெருமையினால் என் மேனி எங்கும் படருகின்றன.

    கலைஞர்

    பிரிவு காரணமாகக் காதலர் உண்டாக்கினார் எனும் பெருமிதம் பொங்கிடப் பசலை நிறம் என் உடலில் ஏறி ஊர்ந்து பரவுகின்றது!