காமத்துப்பால் (Inbam)Chapter 127: குறிப்பறிவுறுத்தல்
திருக்குறள் 1278
Thirukkural Verse 1278 — Reading the Signs
நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும் எழுநாளேம் மேனி பசந்து.
English Meaning
It was but yesterday my lover departed (from me); and it is seven days since my complexion turned sallow.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
எம்முடைய காதலர் நேற்றுதான் பிரிந்து சென்றார்; யாமும் மேனி பசலை நிறம் அடைந்து ஏழு நாட்கள் ஆய்விட்ட நிலையில் இருக்கின்றோம்.
சாலமன் பாப்பையா
என் காதலர் நேற்றுத்தான் என்னைப் பிரிந்து போனார்; அப்பிரிவிற்கு வாடி என் மேனியின் நிறம் வேறுபட்டு ஏழு நாள்களாகிவிட்டன.
கலைஞர்
நேற்றுத்தான் எம் காதலர் பிரிந்து சென்றார்; எனினும், பல நாட்கள் கழிந்தன என்பது போல் பசலை நிறம் எம்மைப் பற்றிக் கொண்டதே