அறத்துப்பால் (Aram)Chapter 16: பொறையுடைமை

    திருக்குறள் 156

    Thirukkural Verse 156 — The Possession of Patience

    Thiruvalluvar

    ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ்.


    English Meaning

    The pleasure of the resentful continues for a day. The praise of the patient will continue until (the final destruction of) the world.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு.

    சாலமன் பாப்பையா

    தமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டித்தவர்க்குத் தண்டித்த அன்று மட்டுமே இன்பம்; பொறுத்துக் கொண்டவர்க்கோ உலகம் அழியும் வரை புகழ் இருக்கும்.

    கலைஞர்

    தமக்குக் கேடு செய்தவரை மன்னித்திடாமல் தண்டிப்பவர்க்கு அந்த ஒரு நாள் மட்டுமே இன்பமாக அமையும் மறப்போம் மன்னிப்போம் எனப் பொறுமை கடைப் பிடிப்பபோருக்கோ, வாழ்நாள் முழுதும் புகழ்மிக்கதாக அமையும்