அறத்துப்பால் (Aram)Chapter 4: அரண் வலியுறுத்தல்
திருக்குறள் 32
Thirukkural Verse 32 — அரண் வலியுறுத்தல்
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு.
English Meaning
There can be no greater source of good than (the practice of) virtue; there can be no greater source of evil than the forgetfulness of it.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
ஒரு வருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை.
சாலமன் பாப்பையா
அறம் செய்வதை விட நன்மையும் இல்லை. அதைச் செய்ய மறப்பதைவிட கெடுதியும் இல்லை
கலைஞர்
நன்மைகளின் விளைநிலமாக இருக்கும் அறத்தைப் போல் ஒருவருடைய வாழ்க்கைக்கு ஆக்கம் தரக்கூடியது எதுவுமில்லை; அந்த அறத்தை மறப்பதை விடத் தீமையானதும் வேறில்லை