அறத்துப்பால் (Aram)Chapter 37: அவா அறுத்தல்
திருக்குறள் 364
Thirukkural Verse 364 — அவா அறுத்தல்
தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது வாஅய்மை வேண்ட வரும்.
English Meaning
Purity (of mind) consists in freedom from desire; and that (freedom from desire) is the fruit of the love of truth.
Share this result
Generate a beautiful card to share on WhatsApp or social media. Your link gives friends a 14-day Full Pro trial.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
தூயநிலை என்றுக் கூறப்படுவது அவா இல்லா திருத்தலே யாகும், அவா அற்ற அத்தன்மை மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.
சாலமன் பாப்பையா
மனத்தூய்மை என்பது ஆசை இல்லாமல் இருப்பதே; ஆசை இல்லாமல் இருப்பதோ மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.
கலைஞர்
தூய்மை என்பது பேராசையற்ற தன்மையாகும் அத்தூய்மை வாய்மையை நாடுவோர்க்கே வாய்க்கும்