பொருட்பால் (Porul)Chapter 62: ஆள்வினை உடைமை
திருக்குறள் 618
Thirukkural Verse 618 — ஆள்வினை உடைமை
பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி.
English Meaning
Adverse fate is no disgrace to any one; to be without exertion and without knowing what should be known, is disgrace.
Share this result
Generate a beautiful card to share on WhatsApp or social media. Your link gives friends a 14-day Full Pro trial.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
நன்மை விளைவிக்கும் ஊழ் இல்லாதிருத்தல் யார்க்கும் பழி அன்று, அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பழி.
சாலமன் பாப்பையா
உடல் உறுப்பு, செயலற்று இருப்பது குறை ஆகாது. அறிய வேண்டியவதை அறிந்து முயற்சி செய்யாது இருப்பதே குறை.
கலைஞர்
விதிப்பயனால் பழி ஏற்படும் என்பது தவறு, அறிய வேண்டியவற்றை அறிந்து செயல்படாமல் இருப்பதே பெரும்பழியாகும்