காமத்துப்பால் (Inbam)Chapter 114: அலர் அறிவுறுத்தல்

    திருக்குறள் 1150

    Thirukkural Verse 1150 — அலர் அறிவுறுத்தல்

    Thiruvalluvar

    தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும் கெளவை எடுக்கும்இவ் வூர்.


    English Meaning

    The rumour I desire is raised by the town (itself); and my lover would if desired consent (to my following him).

    Share this result

    Generate a beautiful card to share on WhatsApp or social media. Your link gives friends a 14-day Full Pro trial.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    யாம் விரும்புகின்ற அலரை இவ்வூரார் எடுத்துக்கூறுகின்றனர், அதனால் இனிமேல் காதலர் விரும்பினால் விரும்பியவாறு அதனை உதவுவார்.

    சாலமன் பாப்பையா

    நான் விரும்பிய அவரைப் பற்றித்தான் இவ்வூர் பேசுகிறது. இனி என் காதலரும் நான் விரும்பியபோது என்னைத் திருமணம் செய்வார்.

    கலைஞர்

    யாம் விரும்புகின்றவாறு ஊரார் அலர் தூற்றுகின்றனர்; காதலரும் விரும்பினால் அதை ஒப்புக் கொள்வார்