அறத்துப்பால் (Aram)Chapter 2: வான் சிறப்பு

    திருக்குறள் 15

    Thirukkural Verse 15 — வான் சிறப்பு

    Thiruvalluvar

    கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை.


    English Meaning

    Rain by its absence ruins men; and by its existence restores them to fortune.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்

    சாலமன் பாப்பையா

    பெய்யாமல் மக்களைக் கெடுப்பதும்; பெய்து கெட்டவரைத் திருத்துவதும் எல்லாமே மழைதான்

    கலைஞர்

    பெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடியதும், பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்வுக்கு வளம் சேர்ப்பதும் மழையே ஆகும்