அறத்துப்பால் (Aram)Chapter 35: துறவு

    திருக்குறள் 346

    Thirukkural Verse 346 — Renunciation

    Thiruvalluvar

    யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்.


    English Meaning

    He who destroys the pride which says “I”, “mine” will enter a world which is dificult even to the Gods to attain.

    Share this result

    Generate a beautiful card to share on WhatsApp or social media. Your link gives friends a 14-day Full Pro trial.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    உடம்பை யான் எனக் கருதலும் தொடர்பு இல்லாத பொருளை எனது எனக்கருதலுமாகிய மயக்கத்தை போக்குகின்றவன், தேவர்க்கும் எட்டாத உயர்ந்த நிலை அடைவான்.

    சாலமன் பாப்பையா

    உடல் பற்றி நான் என்றும், பொருள் பற்றி எனது என்றும் வரும் செருக்கை மனத்துள் இருந்து அறுத்து விட்டவன், வானவர்க்கும் மேலான வீட்டுலகத்தை அடைவான்.

    கலைஞர்

    யான், எனது என்கின்ற ஆணவத்தை அறவே விலக்கி விட்டவன், வான்புகழையும் மிஞ்சுகின்ற உலகப் புகழுக்கு உரியவனாவான்