திருக்குறள் 593
Thirukkural Verse 593 — ஊக்கம் உடைமை
க்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம் ஒருவந்தம் கைத்துடை யார்.
English Meaning
They who are possessed of enduring energy will not trouble themselves, saying, “we have lost our property.”
Continue reading
Keep 108 selected Kurals in one collection
Get a free reading edition with modern Tamil and English meanings, delivered to your inbox.
22 pages · Sent to your inbox
Share this result
Generate a beautiful card to share on WhatsApp or social media. Your link gives friends a 14-day Full Pro trial.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
ஊக்கத்தை உறுதியாகத் தம்கைப் பொருளாக உடையவர், ஆக்கம்( இழந்து விட்டக்காலத்திலும்) இழந்து விட்டோம் என்று கலங்க மாட்டார்.
சாலமன் பாப்பையா
ஊக்கத்தைத் தம் கைவசம் கொண்டவர், செல்வத்தை இழந்தாலும், இழந்து விட்டோமோ என்று மனம் கலங்க மாட்டார்.
கலைஞர்
ஊக்கத்தை உறுதியாகக் கொண்டிருப்பவர்கள், ஆக்கம் இழக்க நேர்ந்தாலும் அப்போதுகூட ஊக்கத்தை இழந்து கலங்க மாட்டார்கள்