திருக்குறள் 1314
Thirukkural Verse 1314 — Feigned Sulking
யாரினும் காதலம் என்றேனா ஊடினாள் யாரினும் யாரினும் என்று.
English Meaning
When I said I loved her more than any other woman, she said “more than others, yes, more than others,” and remained sulky.
Share this result
Generate a beautiful card to share on WhatsApp or social media. Your link gives friends a 14-day Full Pro trial.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
யாரையும் விட நாம் மிக்க காதல் கொண்டிருக்கிறோம் என்று சொன்னேனாக; யாரை விட...? யாரை விட..? என்று கேட்டு ஊடல் கொண்டாள்.
சாலமன் பாப்பையா
காதலர் எவரைக் காட்டிலும் நாம் மிகுந்த காதல் உடையவர்கள் என்றேன்; அதற்கு அவள் நான் பலரையும் காதலிப்பதாகவும், அவர்களுள் இவள்மீது அதிகக் காதல் உடையவன் என்று சொன்னதாகவும் எண்ணி, எவளைக் காட்டிலும் எவளைக் காட்டிலும் என் மீது காதல் உடையீர் என்று ஊடினாள்.
கலைஞர்
``யாரைக் காட்டிலும் உன்னிடம் நான் காதல் மிகுதியாகக் கொண்டுள்ளேன்'' என்று இயல்பாகச் சொன்னதைக் கூடக் காதலி தவறாக எடுத்துக் கொண்டு ``யாரைக்காட்டிலும் யாரைக் காட்டிலும்'' எனக் கேட்டு ஊடல் புரியத் தொடங்கி விட்டாள்