அறத்துப்பால் (Aram)Chapter 7: மக்கட்பேறு
திருக்குறள் 65
Thirukkural Verse 65 — The Wealth of Children
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று அவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.
English Meaning
The touch of children gives pleasure to the body, and the hearing of their words, pleasure to the ear.
Share this result
Generate a beautiful card to share on WhatsApp or social media. Your link gives friends a 14-day Full Pro trial.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
மக்களின் உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு இன்பம் தருவதாகும்: அம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டால் செவிக்கு இன்பம் தருவதாகும்.
சாலமன் பாப்பையா
பெற்ற பிள்ளைகளின் உடலைத் தழுவுவது உடலுக்கு இன்பம். அவர்களின் பேச்சைக் கேட்பது காதிற்கு இன்பம்
கலைஞர்
தம் குழந்தைகளைத் தழுவி மகிழ்வது உடலுக்கு இன்பத்தையும், அந்தக் குழந்தைகளின் மழலை மொழி கேட்பது செவிக்கு இன்பத்தையும் வழங்கும்